உள்ளூர் செய்திகள்
வேன் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம்
- சிவகாசி அருகே வேன் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம் அடைந்தனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் நிமல் (வயது 19), சுதர்சன் (24), நாகூர் (20) ஆகிய 3 பேரும் சிவகாசியில் தங்களது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வெம்ப க்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சங்க ரன்கோவிலில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காய மடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிமல் இறந்தார்.
சுதர்சன், நாகூர் ஆகி யோர் அரசு மருத்துமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து குறித்து நிமல் தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் வெம்ப க்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.