உள்ளூர் செய்திகள்

மகளின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல்

Published On 2023-09-10 13:32 IST   |   Update On 2023-09-10 13:32:00 IST
  • மகளின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தந்தையிடம் பணம் கேட்டு வாலிபர் மிரட்டல் விடுத்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த 46 வயது நபர் எலக்ட்ரானிக் நிறுவ னம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ஒருவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் அவரது மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை மெக்கானிக்கிடம் விசாரித்தார். அப்போது அவர் அவதூறாக பேசியதுடன் மகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News