உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் நலம் விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள்.

ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு

Published On 2023-04-27 13:59 IST   |   Update On 2023-04-27 13:59:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு மீட்டனர்.
  • கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி ஒரே இடத்தில் கிடந்தார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்த்து மூதாட்டியின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் மூதாட்டியை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீசையும் நியமித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அவரை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். ெதாடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News