தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்க தடை - மீறினால்...

Published On 2025-12-19 12:09 IST   |   Update On 2025-12-19 12:09:00 IST
  • பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் இன்றி சட்டவிரோதமாக பிட்புல், ராட்வீலர் நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News