உள்ளூர் செய்திகள்

மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தர வேண்டும்

Published On 2023-05-26 13:52 IST   |   Update On 2023-05-26 13:52:00 IST
  • மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.
  • மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது80). இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

தவசி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லம்மாள் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார்.

தான் வசித்து வரும் வீட்டையும் மகன்க ளுக்கு தானமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

இந்தநிலையில் மூத்த மகன் பொன்மாடசாமி, தாய் செல்லம்மாளை வீட்டை விட்டு வெளியேறு மாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து செல்லம்மாள் ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார்் செய்தார். அந்த மனுவில் மகன் தன்னை அடித்து விரட்டுவதால் வீட்டை தானமாக வழங்கிய பத்திரத்தை ரத்து செய்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News