உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக விண்ணப்பிக்கலாம்

Published On 2023-04-22 08:49 GMT   |   Update On 2023-04-22 08:49 GMT
  • மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிற னாளிகள் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றி ருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத் தொழில் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரையிலும் கடனு தவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவை யில்லை.

மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.500 லட்சம் வரை மேலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு வரையில் அதிகபட்சமாக ரூ.17.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது, மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்குத் தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DICஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News