உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ேகாவில் யானைக்கு கட்டப்பட்டுள்ள புதிய தங்குமிடம்.

யானைக்கு புதிய தங்குமிடம்

Published On 2022-06-09 11:38 GMT   |   Update On 2022-06-09 11:38 GMT
  • ஆண்டாள் கோவில் யானைக்கு ஷவர்- மின்விசிறி வசதியுடன் புதிய தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோவிலில் ஜெயமால்யதா என்ற 19 வயதான யானை உள்ளது.இந்த யானை தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ணன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் யானை ஜெயமால்யதா தங்குவதற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ராம்கோ நிறுவனத்தின் சார்பில் ரூ.24 கோடியே 80 லட்சம் செலவில் புதிய தங்கமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல காற்றோட்டமிக்க இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த தங்குமிடத்தில் யானை ஹாயாக குளிக்கும் வகையில் 12 தூவாரக்குழாய் வசதி மற்றும் பெரிய அளவிலான 2 மின்விசிறிகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலை யில் விரைவில் யானை தங்குமிடம் திறக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News