உள்ளூர் செய்திகள்

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

Published On 2023-01-23 07:44 GMT   |   Update On 2023-01-23 07:44 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26-ந் தேதி (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 31.12.2022 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். எனவே 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News