- ராஜபாளையத்தில் அரசு பஸ் ேமாதி பெண் குழந்தையின் கால் துண்டானது.
- வாகனங்களை முந்திச்சென்றபோது இந்த விபத்து நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள முத்துலிங்க புரத்தைச் சேர்ந்தவர் முத்து வேல் (வயது 42). கூலி தொழி லாளியான இவருக்கு பாப்பு என்ற மனைவியும், 8 வயதில் அபிஷ்குமார் என்ற மகளும், 1 வயதில் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
பஸ் மோதியது சம்பவத்தன்று ராஜ பாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் உறவி னர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முத்துவேல் தனது மனைவி மற்றும் குழந்தை களுடன் மோட்டார் சைக்கிள் சென்றார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபின் முத்துவேல் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். டி.பி. மில்ஸ் ரோடு வடக்கு மலையடிபட்டி வழியாக செல்லும் போது அங்குள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சிறிது நேரத்தில் அந்தப் பகுதியை ரெயில் கடந்த பின் கேட் திறக்கப்பட்டது. பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த முத்துவேல் முந்தி செல்வ முயற்சித்ததாக கூறப்படுகிறது.அப்போது எதிர்புறத்தில் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக முத்துவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கால் துண்டானது இதில் நிலைகுலைந்த முத்துவேல், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்தனர்.
அப்போது அரசு பஸ்சின் சக்கரம் ஒரு வயது குழந்தை தனலட்சுமி கால் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த பிஞ்சு குழந்தையின் கால் துண்டானது. வலியால் துடித்த குழந்தையை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சேத்தூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். விழிப்புணர்வு முத்துவேல் மோட்டார் சைக்கிளில் 3 பேரை அழைத்து சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றதால் விபத்தில் சிக்கி கைக்குழந்தையின் கால் துண்டானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது , ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டு மென போக்குவரத்து போலீசார் நாள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் செல்வோர் விபத்தில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.