உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
- புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ்(41). இவர் ஆலங்குளம் முக்கு ரோட்டில் பெட்டி கடை வைத்துள்ளார். ரோந்து போலீசார் இவரது கடையில் சோதனையிட்டபோது 2½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.
அதனை பறிமுதல் செய்த ஆலங்குளம் போலீசார் மிக்கேல்ராஜை கைது செய்தனர். சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் அந்த பகுதியில் உள்ள தியேட்டரின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.
போலீசார் ரோந்து சென்று சோதனையிட்டபோது 150 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.