உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் எலக்ட்ரீசியன் மீது தாக்குதல்

Published On 2023-04-17 12:39 IST   |   Update On 2023-04-17 12:39:00 IST
  • கோவில் திருவிழாவில் எலக்ட்ரீசியனை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததை அந்த வாலிபர் தட்டிக்கேட்டார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று 12-ம்நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தமிழ்பாண்டி (வயது22) என்பவரும் கலந்து கொண்டார். அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததால் ஸ்ரீரங்கபாளையம் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணபவன் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்பாண்டி, சரவண பவனை ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கினார். இந்த சம்பவத்தில் சரவணபவன் படுகாயம டைந்தார். இதனை கண்ட தமிழ்பாண்டி தப்பிச்சென்று விட்டார்.

இதுபற்றி சரவணபவன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து சரவணபவனை தாக்கிய தமிழ்பாண்டியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News