உள்ளூர் செய்திகள்
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்
- 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைதானார்.
- வாலிபர் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வாலிபர் ஒருவர் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர் ராஜேஸ்வரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்தப்பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்ேபாது கூலித்தொழிலாளியான திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 26) என்பவர், ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கூறப்பட்டுள்ள வாலிபர் சுரேஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.