உள்ளூர் செய்திகள்

நின்றிருந்த பஸ் மீது லாரி மோதி ஒருவர் சாவு; 3 பேர் காயம்

Published On 2023-03-28 14:19 IST   |   Update On 2023-03-28 14:19:00 IST
  • விருதுநகர் அருகே நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் திருச்செந்தூர் செல்வதற்காக கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றார். அந்த பேருந்து கல்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது.

இதனால் பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் பண்டாரம் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருப்புக்கோட்டை பணிமனைக்கு தகவல் கொடுக்க சென்றார். பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சாலையோரத்திலும், பஸ்சின் முன்னாலும் நின்றிருந்தனர். பஸ்சின் கண்டக்டர் ஏகாம்பரம் பழுதடைந்த டயரை கழட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்றிருந்த பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ் முன் பக்கம் நகர்ந்து நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் முருகேசன், பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாதன், போத்தனூர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து முருகேசன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News