உள்ளூர் செய்திகள்
பஸ் உரிமையாளரிடம் ரூ.5½லட்சம் மோசடி
- பஸ் உரிமையாளரிடம் ரூ.5½லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது54). தனியார் பஸ் உரிமையாளர். இவரிடம் திருப்பதி என்பவர் காசாளராக 2 ஆண்டுகள் வேலை பார்த்தார்.
அப்போது டோல்கேட் கட்டணம் பஸ் உரிமையாளர் சங்க கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக கொடுத்த ரூ.5½லட்சம் பணத்தை திருப்பதி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலிங்கத்திற்கு தெரியவந்தது. அவர் திருப்பதியிடம் விசாரித்த போது அவர் கடந்த மார்ச் மாதத்தில் வேலையை விட்டு சென்றுவிட்டார்.
மேலும் மோசடி செய்த பணம் குறித்து எதுவும் கூறாமல் இருந்தார். இதை தொடர்ந்து அருப்புக் கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.