உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

Published On 2023-03-09 13:25 IST   |   Update On 2023-03-09 13:25:00 IST
  • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருத்தங்கலை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மரத்தடியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து போர்மேன் இளங்கோவனை கைது செய்தார்.

திருத்தங்கல் பாண்டியன் நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பள்ளி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திறந்த வெளியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபோர்மேன் கணேசனை கைது செய்தனர்.

சேதுராமலிங்காபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள கோழிப்பண்ணை பகுதியில் உள்ள தகரசெட்டில் அந்தோணிராஜ்(55), அக்கினிராஜ் (26) ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News