உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் பள்ளியில் வன்முறை சேதம்: டிரோன் காமிரா மூலம் பதிவு செய்த புலனாய்வு குழு

Published On 2022-07-22 08:55 GMT   |   Update On 2022-07-22 13:05 GMT
  • சின்னசேலம் பள்ளியில் வன்முறை சேதத்தை புலனாய்வு குழு டிரோன் காமிரா மூலம் பதிவு செய்தனர்.
  • இந்த சேதங்களை கணக்கிடும் பணி யில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கடந்த17-ந் தேதி வன்முறை ஏற்பட்டது. அப்போது கலவரக்காரர்கள், பஸ்கள், கார், டிராக்டர், பொக்லைன், முதல்வர் அறையில் இருந்த கணினி மற்றும் ஆவணங்களை எரித்தனர்.

இந்த கலவரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சேதங்களை கணக்கிடும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குழுவினர் முதல் கட்டமாக வன்முறை நடந்த பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வகுப்பறைகள், கலவரத்தில் எரிக்கப்பட்ட பஸ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 'டிரோன்' மூலம் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News