உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலத்திற்கு மனு அளிக்க வந்த பெண்கள்.

இடவசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு

Published On 2023-09-04 08:27 GMT   |   Update On 2023-09-04 08:27 GMT
  • 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.
  • ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது.‌

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சாலை நரியம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நரியம்பாளை யத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்ப ங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூவானம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நரியம்பாளை யத்திற்கும் , பூவானம் கிராமத்திற்கும் 15 கி.மீ. இருப்பதால் நாங்கள் அனைவரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

குழந்தைகள், பெரியவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. போதிய பஸ் வசதியும் கிடையாது. எனவே எங்களுக்கு ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News