உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்.

கிராம மக்கள் சாலைமறியல்

Published On 2022-12-04 15:20 IST   |   Update On 2022-12-04 15:20:00 IST
  • புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
  • தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுக்கூர்:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News