உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் சரிபார்ப்பு- வருவாய் ஊழியர்களுக்கு பயிற்சி

Published On 2023-08-24 14:40 IST   |   Update On 2023-08-24 14:40:00 IST
  • சரிபார்த்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, புதிய செயலி உருவாக்கம்.
  • நிகழ்ச்சியில் 69 பேர் கலந்து கொண்டனர்.

அரவேணு,

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வருகிற செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கார்டுதாரர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அப்படி சரிபார்த்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, தமிழக அரசின் முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.அந்த செயலியை எப்படி செயல்படுத்துவது? என்பது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை எப்படி சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்த பயிற்சி முகாம், குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் நடந்தது.

முகாமில் அலுவலர்கள் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலியில் ஊழியர்கள் செல்போன் எண், கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். கணினியில் புதிய படிவம், சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என 2 பிரிவுகள் இருக்கும்.

அங்கு புதிய படிவத்தை தேர்வு செய்து, அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து சமர்ப் பிக்க வேண்டும். சமர்ப்பிக் கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வகையில் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

எனவே ஊழியர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத ்தொகை திட்ட செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் 11 ஊராட்சி செயலர்கள் உள்பட மொத்தம் 69 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News