கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
- நாளை கடைசி நாள்
வேலூர்:
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மற்றும் சமூ கத்தில் வீரத்துடனும், துணிச்சலுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு "கல்பனா சாவ்லா" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. பெண்கள் தாங்கள் புரிந்த சாதனைகளை விரிவாக எழுதி "கல்பனா சாவ்லா" விருதுக்கான விண்ணப் பம் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
மேலும் விருதுக்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் உறுப்பினர் செயலர், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளை யாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-03 என்ற முகவரிக்கு நாளைக்குள் (புதன்கிழமை) கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.