விபத்தில் சிக்கிய லாரி.
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்த லாரி
- டிரைவர் கட்டுபாட்டை இழந்தது
வேலூர்:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இயங்கி வரும் கார் நிறுவனத்தில் இருந்து 7 கார்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரி பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்து கொண்டிருந்தபோது இடது புறத்தில் இன்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென வலது புறம் வந்தது. இதனைக் கண்ட லாரி டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பி பிரேக் பிடித்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிரே உள்ள சாலைக்கு பாய்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.