உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்த லில்லியை போலீசார் மீட்ட காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Published On 2023-06-26 08:29 GMT   |   Update On 2023-06-26 08:29 GMT
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
  • குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

மாவட்ட திட்ட அலுவலர் அப்போது குடியாத்தம் அடுத்த செதுக்கரையை சேர்ந்த லில்லி என்பவர் தனது கணவர் கடந்த மாதம் இறந்து விட்டதால் இறப்புச் சான்று கேட்டு மனு அளித்தார். அப்போது திடீரென லில்லி மயங்கி கீழே விழுந்தார்.

அங்கு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் லில்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 1157 குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News