உள்ளூர் செய்திகள்

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேடயம் வழங்கிய காட்சி.

சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்களுக்கு கேடயம்

Published On 2023-07-05 14:49 IST   |   Update On 2023-07-05 14:49:00 IST
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்
  • வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்தது

வேலூர்:

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேடயங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

ஜூலை 1-ந்தேதி இந்தியா முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர்களுக்கு சமூகத்தில் முக்கிய பங்கு உண்டு. நோயாளிகளின் நல்வாழ்வுக்காக டாக்டர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.

நோயுற்ற நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள். டாக்டர்கள் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறார்கள்.

மேலும், மருத்துவ அறிவியலை நன்கு புரிந்து கொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணி க்கிறார்கள்.

நோயினாலும் அவர்களது உறவினர்க ளாலும் தாக்கப்பட்டாலும் டாக்டர்கள் கைவிடாத பல சம்பவங்களில் பொது மக்களுக்கான மருத்துவ சேவை களை தொடர்கின்றனர். உயிர் காக்கும் மருத்துவத்தை போற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News