கெங்கையம்மன் கோவில் திருவிழாவைெயாட்டி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம்
- அம்மன் சிரசு பொருத்தம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா கடந்த 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 2-ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
மூன்றாம் திரு நாளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. 4-வது நாள் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் உற்சவம் நடைபெற்றது.
5-வது நாள் சரஸ்வதி அலங்கார உற்சவம் 6-வது நாள் ஈஸ்வர பூஜை அலங்கார உற்சவம், 7-வது நாள் மகிடாசூர சம்மார அலங்கார உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று அதிகாலை கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் விஸ்வரூப காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்துவாச்சாரி பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. சிறுவர்க ளுக்கான பொழுதுபோக்கு ராட்டினங்கள் பல விதமாக கடைகள் கோவில் வளாகத்தில் களை கட்டுகிறது. ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.
இதேபோல வேலூர் கலெக்டர் அலுவலகம் மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.