- பொதுமக்கள் பீதி
- போலீசார் ஆய்வு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரம் அருகே உள்ள பேங்க் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் ஸ்ரீவாசன் இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனி தனி தனியாக வசித்து வருகின்றனர். வெங்கடாசலம் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் வெங்கடாஜலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர். மேலும் அவரது மகன் குடியிருந்த பகுதியிலும் புகுந்தனர். வீட்டில் பல்வேறு இடங்களில் நகை பணம் இருக்கிறதா என தேடிப்பார்த்தனர். எதுவும் இல்லாதால் அங்கிருந்து மற்ற வீடுகளுக்கு திருட சென்றனர்.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள விஜயவர்மன் என்பது வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த பட்டுப் புடவைகளை திருடினர். மேலும் குப்பன் என்பவரது வீட்டில் இருந்து ஒரு பைக் திருடி சென்றனர்.
அதேபோல அந்த பகுதியில் உள்ள டாக்டர் மிதுன் சுகுமார் வீட்டுக்குள் புகுந்து நகை பணம் உள்ளதா என தேடி பார்த்தனர். எதுவும் இல்லாதால் அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஒரே இரவில் அடுத்த அடுத்த 5 வீடுகளில் கொள்ளை கும்பல் போது அட்டகாசம் செய்துள்ளனர்.
இன்று காலையில் வீடுகளின் உரிமையாளர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்து சத்துவா ச்சாரி போலுசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரே இரவில் 5 வீடுகளில் நடந்து திருட்டு சம்பவம் சத்துவாச்சாரி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.