உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

ஒடுகத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் அகற்றம்

Published On 2022-11-16 15:09 IST   |   Update On 2022-11-16 15:09:00 IST
  • வருவாய்த்துறையினருக்கு வந்த புகார் அடிப்படையில் நடவடிக்கை
  • பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குடிசை வீடுகளை இடித்து அகற்றினர்.

இதில் வருவாய்துறை அதிகாரிஅசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News