உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசிய காட்சி.

குற்ற வழக்குகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும்

Published On 2023-01-18 09:15 GMT   |   Update On 2023-01-18 09:15 GMT
  • டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாருக்கு அறிவுரை
  • புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது

வேலூர்:

வேலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்க ளுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது.

இந்த பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படுவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இங்கு கற்றுக் கொடுக்கப்படும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இது வழக்கு விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும்.

குற்ற வழக்குகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவது எப்படி என்பதை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிற்சி வகுப்பில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், பணியிடை பயிற்சி பள்ளி டி.எஸ்.பி. முருகன் மற்றும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News