உள்ளூர் செய்திகள்

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி சமையல் இடத்தில் உணவை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்த காட்சி.

5½ ஏக்கரில் புதிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்ட நடவடிக்கை

Published On 2023-06-09 15:20 IST   |   Update On 2023-06-09 15:20:00 IST
  • மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை
  • கதிர் ஆனந்த் எம்.பி. பேட்டி

வேலூர்:

வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் இன்று காலை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

ஆஸ்பத்திரியில் உள்ள மருந்தகம் நோயாளிகள் பிரிவு சமையல் கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து கதிர் ஆனந்த் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை திகழ்கிறது. தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக இயங்குகிறது.

தற்போது மத்திய அரசு மாநில அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது இந்த மருத்துவமனையில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை செய்து கொடுப்பதற்காக கமிட்டி ஒன்று நியமித்துள்ளனர்.

இந்த கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை டாக்டர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த கமிட்டி செயல்படும்.

மருத்துவமனை தொடர்பாக இனி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கையும் இந்த கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும். அதின் அடிப்படையில் இங்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ஏராளமான நடுத்தர மற்றும் தொழிலாளர் மக்களுக்கு உதவிகரமாக இந்த மருத்துவமனை திகழ்வது தெரிய வந்தது.

இந்த மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது. அதில் முக்கியமாக இடப்பற்றாக்குறை உள்ளது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சுமார் 5½ ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான இடம் கேட்டுள்ளனர்.

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. மாவட்ட கலெக்டரும் அதற்கான நிலம் தருவதாக தெரிவித்துள்ளார்.

இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கான அனைத்து கட்டுமானத்திற்கான நிதியை தொகை மத்திய அரசு தருவதாக தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News