வேலுார் நறுவீ மருத்துவமனையில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில், வேலுார் சிஎம்சி மருத்துவமனை முன்னாள் இயக்குனர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அருகில், நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், குழந்தைகள் நல தலைமை டாக்டர் சோனியா மேரி குரியன், தலைமை மகப்பேறு டாக்டர் அருணா கேக்ரே.
சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டியது அவசியம்
- நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் பேச்சு
- மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது
வேலூர்:
வேலூர் நறுவீ மருத் துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா, பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக் டர் அரவிந்தன் நாயர் வர வேற்றார். நறுவீ மருத்துவ மனை தலைவர் ஜி.வி. சம்பத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்திய கலாச்சாரத்தில் பாரம்பரியமாக பெண்க ளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி இருந் தாலும், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லி வளர்த்து வருகின் றனர். சமுதாயத்தில் பெண் களுக்கு உரிய அதிகாரம் வழங்கவேண்டியது அவசி யமாகிறது.
பெண்களுக்கு வழங்கப்படும் சம பங்கு காரணமாக இன்று பைலட், ராணுவம், காவல் துறை, மருத்துவ துறை, சட்டம் மற்றும் நீதி, நிர்வாக துறைஉள்ளிட்ட எல்லா துறை களிலும் உயர் பதவியில் வகிக்கின்றனர்.
மருத்துவ சேவை யில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. நறுவீ மருத்துவமனையில் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்கள் எண் ணிக்கை அதிகம். இந்த மருத்துவமனை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ் வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக வேலுார் சிஎம்சி மருத்துவ மனை முன்னாள் இயக்கு னர் டாக்டர் ஜாய்ஸ் பொன் னையா கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில், மருத்துவம னையின் குழந்தைகள் நல தலைமை டாக்டர் சோனி யா மேரிகுரியன்,மகப்பேறு டாக்டர் ரம்யா, மருத்துவ மனை மகப்பேறு தலைமை டாக்டர் அருணா கேக்ரே, பொது மேலாளர் நித்தின் சம்பத் மற்றும் மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழிய ர்கள் என பலர் பங்கேற் றனர். மருத்துவ கண்கா ணிப்பாளர் டாக்டர் ஜேக் கப் ஜோஸ் நன்றி கூறினார்.