உள்ளூர் செய்திகள்

புதிய வாட்ஸ்அப் எண்ணை டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகம் செய்த காட்சி. அருகில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்.

திருட்டு போன செல்போன் மீட்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம்

Published On 2023-07-04 14:24 IST   |   Update On 2023-07-04 14:24:00 IST
  • ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தியை முதலில் அனுப்ப வேண்டும்
  • விவரங்களை பதிவு செய்தால் படிவம் நேரடியாக மாவட்ட சைபர் குற்றப்பிரிவுக்கு சென்றுவிடும்

வேலூர்:

வேலூர் வேலூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டு போனாலோ அல்லது தொலைந்துபோனால் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் வகையில் 'செல் டிராக்கர்' என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் செல் போன் தொலைந்தவர்கள் போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கும் நடைமுறையில் உள்ளது.

இதை எளிமைாக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் புதிய நடைமுறையாக 'செல் டிராக்கர்' என்ற வாட்ஸ்- அப் எண் அறிமுகம் செய்ய ப்பட்டு ள்ளது.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வாட்ஸ்-அப் எண்ணை டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது உடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 94862-14166 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு செல் போனை தொலைத்தவர்கள் 'ஹாய்' என்று குறுஞ்செய்தியை முதலில் அனுப்ப வேண்டும்.

உடனடியாக அந்த எண்ணுக்கு கூகுள் படிவம் இணைப்பு அனுப்பப்படும். அந்த படிவத்தில் செல்போன் தொலைத்தவர்களின் பெயர், முகவரி, தொலைந்துபோன செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் உள்ளிட்ட விவர ங்களை பதிவு செய்தால் அந்த படிவம் நேரடியாக மாவட்ட சைபர் குற்றப்பி ரிவுக்கு சென்றுவிடும்.

அதன்பிறகு சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இதன்மூலம் செல்போன் தொலைத்தவர்கள் அலைச்சல் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News