உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published On 2023-07-17 15:02 IST   |   Update On 2023-07-17 15:02:00 IST
  • அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
  • மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

வேலூர்:

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10. 81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார்.

மேலும் இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெருஷா ஜாஸ்மின் என்ற மாணவியை பாராட்டி சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News