உள்ளூர் செய்திகள்

சாலை திட்ட பணியால் வேலூர் -ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-06-03 14:39 IST   |   Update On 2023-06-03 14:40:00 IST
  • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

வேலூர்:

வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதி கள், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகு திகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த நிலையில் சாலைகள் குண் டும், குழியுமாக உள்ளன.

இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகி தப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட் டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் பிரதான குழாய் இணைப்பு ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையிலும் பாதாள சாக்கடை திட் டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங் கும் பணியும் நடந்தது.

இப்பணிகளால் சைதாப்பேட்டை முரு கன் கோவில் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக் குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கோவில் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

சாலையில் வரும் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறையில் ஆற்காடு சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News