உள்ளூர் செய்திகள்

வேலூரில் ஓடும் ஆட்டோவுக்கு கிருஷ்ணகிரியில் அபராதம்

Published On 2023-07-05 14:52 IST   |   Update On 2023-07-05 14:52:00 IST
  • போக்குவரத்து விதி மீறியதாக குறுஞ்செய்தி வந்தது
  • எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்

வேலூர்:

வேலூர் காகிதப்பட்ட றையை சேர்ந்தவர் தயாளன் (வயது 40). இவர் வேலூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்தியில் தயாளனின் ஆட்டோ கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதி மீறியதாகவும் அவரது ஆட்டோவிற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தயாளன் இது குறித்து இன்று எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார்.

Tags:    

Similar News