உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-07 15:28 IST   |   Update On 2023-09-07 15:28:00 IST
  • விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனை தொடர்ந்து சந்தியா தனது 2 பிள்ளை களுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார்.

இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக் கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெற்றோர் வீட் டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட் டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டி.வி., மீன் தொட்டி, பூஜை அறையில் இருந்த விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சந்தியா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News