- திருமணமாகாத விரக்தியில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 32). இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு 32 வயது ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனஉளைச்சளுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் சீனிவாசன் அறையில் இருந்து வெளியே வராததால் இவரது தாயார் கதவை திறந்து பார்த்தார். அப்போது சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண மாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.