போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேப்பங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில்:-
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. சாக்லேட் உள்ளிட்ட பல வடிவங்களில் போதை பொருள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.
மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.