உள்ளூர் செய்திகள்
வேலூரில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
- வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் ஓல்ட் டவுன் உத்திர மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் என்கிற விக்கி (வயது 25). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு சம்பந்தமாக விக்னேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
விக்னேஷ் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின் பேரில் விக்னேஷை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை ஜெயிலில் உள்ள விக்னேஷிடம் போலீசார் கொடுத்தனர்.