உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சுத்தம் செய்யப்படாத வாட்டர் ஏ.டி.எம்கள்

Published On 2022-10-01 10:39 GMT   |   Update On 2022-10-01 10:39 GMT
  • மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.
  • வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன.

கோத்தகிரி

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஒழிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா முயற்சியின் பேரில் மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.

குறிப்பாக கோத்தகிரி பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் இந்த வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு கோத்தகிரி மார்க்கமாக பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக அளவு பயன்பட்டு வந்த இந்த வாட்டர் ஏ.டி.எம்.களில் உள்ள குடிநீர் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை.

தண்ணீரை பாட்டில்களில் பிடிக்கும் போது சிறிய பூச்சிகள் அதனுள் இருந்து வருகிறது.

இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன. மேலும் கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.மின் பின் பகுதி சிறுநீர் கழிக்கும் இடமாகவே மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாட்டர் ஏ.டி.எம்.களை பார்வையிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News