தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மாணிக்கராஜா
- S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்
- S.V.S.P.மாணிக்கராஜா உள்ளிட்ட அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா தி.மு.க.வில் இணைந்தார்.
மாணிக்கராஜா உள்ளிட்ட அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில் மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அ.ம.மு.க. எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதை மறந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருகிறார் என்று கூறினார்.