உள்ளூர் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் -கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2022-11-26 14:52 IST   |   Update On 2022-11-26 14:52:00 IST
  • நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • மாவட்ட கழகத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட வேண்டும்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் மாநில, மாவடட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளின் விவரங்களையும், புகைப்படங்களையும் மாவட்ட கழகத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News