உள்ளூர் செய்திகள்

சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட படம்.

சங்கரன்கோவில் நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு காச நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-19 09:04 GMT   |   Update On 2022-07-19 09:04 GMT
  • காசநோய் விழிப்புணர்வு முகாமிற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
  • தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மாவட்ட நல கல்வி அலுவலர் மாரிமுத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்டதுணை இயக்குனர் காசநோய் பிரிவு டாக்டர் வெள்ளைச்சாமி பேசியபோது,

தற்போது தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களில் சென்று ஆய்வு செய்தால் மிகப்பெரிய செலவினங்களால் பொதுமக்கள் பாதித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசின் சார்பிலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்வதற்காக இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் காச நோய் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு அந்த வாகனத்துடன் வந்து காசநோய் பரிசோதனை செய்யப்படும் எனவும், பரிசோதனை முடிவின்படி காசநோய் இருப்பது தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து காசநோயிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் எனவும், இதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.தொடர்ந்து காசநோய் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், முதல் நிலை காச நோய் மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார பார்வையாளர் ராம்திவ்யா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News