உள்ளூர் செய்திகள்

திருச்சி ராம்ஜிநகர் அருகே கோவிலில் கொள்ளை

Published On 2023-09-24 12:52 IST   |   Update On 2023-09-24 12:52:00 IST
  • கற்பகிரக கதவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் தேனீர் அருந்துவதற்காக சென்று உள்ளார்.
  • சுமார் 1/2 பவுன் மதிப்புள்ள தாலியை திருடிச் சென்று விட்டனர்

ராம்ஜி நகர்  

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பூசாரியாக மாரிமுத்து என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று மாலை கோவிலை திறந்து பூஜைகள் நடத்தி விட்டு இரவு 7 மணி அளவில் கோவிலின் கற்பகிரக கதவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் தேனீர் அருந்துவதற்காக சென்று உள்ளார். அச்சமயத்தில் மர்ம நபர் யாரோ? அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 1/2 பவுன் மதிப்புள்ள தாலியை திருடிச் சென்று விட்டனர். கோயிலின் வெளி கதவை பூட்டிவிட்டு செல்வதற்காக வந்த பூசாரி கர்ப்பகிரக கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவிலில் உள்ள பொருட்களை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலி மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துவிட்டு பின்னர் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News