உள்ளூர் செய்திகள்

காட்டுப்புத்தூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-23 13:19 IST   |   Update On 2023-09-23 13:19:00 IST
  • தீராத வயிற்று வலியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
  • நோயின் பிடியிலிருந்து பூரணமாக குணமடைய இயலவில்லை.

திருச்சி,  

திருச்சி தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி திருச்சி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து பூரணமாக குணமடைய இயலவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.

பின்னர் கணவர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சாந்தி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News