மீன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
- சமயபுரத்தில் மீன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை
மண்ணச்சநல்லூர்,
சமயபுரம் அம்பலகார தெருவை சேர்ந்த மாவடியன் என்பவரது மகன் முருகன் வயது (48) இவருக்கு திருமணம் ஆகி ருக்குமணி வயது (35) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக கடையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது நிலையில் கடந்த நாலு நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த முருகன் நேற்று முன்தினம் 'ருக்மணியிடம் நால்ரோடு பகுதியில் உள்ள கடைக்கு சென்று வருகிறேன்' என கூறிவிட்டு சென்ற முருகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவியை ருக்மணி சமயபுரம் பகுதியில் சுற்றி தேடி பார்த்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் கண்ணனூர் பேரூராட்சி
பணியாளர் ஒருவர் அப்பகுதியில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்ற போது. ஒரு நபர் தூக்கில் தொங்குவதை பார்த்தவுடன் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றினார்கள்.முதற்கட்ட விசாரணையில் மீன் வியாபாரி முருகன் என்பது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உனது கணவர் சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள போக்குவரத்து நகர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்கள்.
ருக்மணி வீட்டில் இருந்து பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தனது கணவர் முருகன் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும் சம்பவ இடத்தில் சமயபுரம் போலீசார் முருகனின் உடலை மீட்டு திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.