உள்ளூர் செய்திகள்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணைய கட்டுமான பணிகள்

Published On 2023-09-03 06:40 GMT   |   Update On 2023-09-03 06:46 GMT
  • திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணைய கட்டுமான பணிகள் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் சிவராசு நேரில் ஆய்வு
  • ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது

திருச்சி 

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முணையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், நகர பொறியாளர், ஒப்பந்ததாரர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக 9 . 90 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துகட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் கொட்டப்பட்டு குளத்தில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய கலர் மின்விளக்குகள் அமைக்கும் பணி,குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்கள்

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News