உள்ளூர் செய்திகள்
- செல்போனை சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார்
- பின்னர் சக பயணிகள் உதவியுடன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்
திருச்சி,
காரைக்கால் சின்ன கோவில் தோப்பு தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). நடன கலைஞரான இவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார்.
பின்னர் ஊர் திரும்ப டவுன் பஸ்ஸில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் ரெயில் நிலையத்தில் அவர் இறங்கிய போது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார். அப்போது ஆகாஷ் அந்த வாலிபரை பலமாக பிடித்துக் கொண்டார். பின்னர் சக பயணிகள் உதவியுடன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
கைதான வாலிபர் பாலக்கரை காஜா பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் (30)என்பது தெரியவந்தது.