உள்ளூர் செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

Published On 2023-11-03 07:21 GMT   |   Update On 2023-11-03 07:21 GMT
  • இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

திருச்சி

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 51 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 56 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கக்கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

விருப்பம் உடையவர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் 'காவல் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை அலுவலகம் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகம், திருச்சி' என்ற முகவரிக்கு வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு திருச்சி சுப்பிரமணியபுரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News