சுவீட் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- துறையூர் பஸ் நிலையம் அருகே சுவீட் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் அதே பகுதியில் டீ கடையுடன் கூடிய சுவீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது, கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து முருகன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.