உள்ளூர் செய்திகள்

தொட்டியத்தில் தனியார் பள்ளி வாகனம் ஆய்வு

Published On 2022-06-26 14:51 IST   |   Update On 2022-06-26 14:51:00 IST
  • தொட்டியம் பகுதி தனியார் பள்ளி வாகன சோதனை மற்றும் ஆய்வு நடைபெற்றது.
  • அவசரகால வழி, தீ தடுப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டிகள், இருக்கைகள், படிகட்டுகள், வாகனங்களில் ஆவணங்கள், உள்பட அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என அனைவரும் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் சௌடாம்பிகா பள்ளி வளாகத்தில் முசிறி மற்றும் தொட்டியம் பகுதி தனியார் பள்ளி வாகன சோதனை மற்றும் ஆய்வு முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்துதுறை அதிகாரிகள் முசிறி டி.எஸ்.பி அருள்மணி முசிறி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி தொட்டியம் காவல்நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பேருந்து ஓட்டுனர்கள் அனைவருக்கும் பள்ளி குழந்தைகள் வாகனங்களில் ஏற்றுவது இயக்குவது குறித்தும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கட்டாயம் வாகன உதவியாளர் இருக்க வேண்டும் உள்பட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பின்பு அவசரகால வழி, தீ தடுப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டிகள், இருக்கைகள், படிகட்டுகள், வாகனங்களில் ஆவணங்கள், உள்பட அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என அனைவரும் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் சௌடாம்பிகா பள்ளி முதல்வர் பாலசண்முகம், கல்வி ஆலோசகர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News