கழுத்து நெரித்து புதுப்பெண் கொலை?
தா.பேட்டை,
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே தேரப்பம்பட்டி வனப் பகுதியில் ஒரு பெண் இறந்து கிடந்தார். கழுத்து பகுதியில் துண்டு ஒன்றும், அருகில் விஷ பாட்டில் மற்றும் அப்பெண்ணின் கைப்பை கிடந்துள்ளது.இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஜம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலின் அருகில் கிடந்த கைப் பையை ஆராய்ந்தனர். அதில் ஆதார்கார்டு, வங்கி புத்தகம் இருந்துள்ளது.அதில் உள்ள முகவரியின்படி தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரையை சேர்ந்த அறிவழகன் என்பவரது மகள் பிரியங்கா என்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அறிவழகனை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.பிரியங்கா பிளஸ்-2 படித்து வீட்டில் இருந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாதேவி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். அன்று முதல் எங்கள் வீட்டிற்கு அவர் வருவதில்லை என்று அவர் தெரிவித்ததாக தெரிகிறது.இதற்கிடையே சம்பவம் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி.அருண்குமார் ேநரில் சென்று விசாரணை நடத்தினார்.முதற்கட்ட விசாரணையில் துண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு பிரியங்கா கொலை ெசய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.